
நாளை முதல் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பஸ் பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளாம்
பஸ் பயணச் சீட்டுகளை, வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளும் வசதி நாளை (24) முதல் நடைமுறைக்கு வருகிறது .
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இந்த செயற்திட்டத்தன் ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படுகிறது.
பஸ் கட்டணத்தை செலுத்திய பின்னர், நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்காமை பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளமைக்கு
தீர்வாகவே வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் பஸ் பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

