மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம்

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம்

மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகம் இன்று காலைமன்னார் ரயில் வீதி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராச்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )