
தரம் 5 புலமைப்பரிசில் மதிப்பீடுஇம்மாதம் 22 முதல் 27 வரை 6 நாட்களுக்குநடைபெறும்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டிடற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்ட பின்னர், 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு 43 நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சைக்கு 3 37951 மாணவர்கள் தோற்றினர்.
நாடளாவிய ரீதியில் 2787 நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது.
அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

