கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று 10 மணிமுதல் நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று 10 மணிமுதல் நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 10.00 மணி முதல் இன்று இரவு 8.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என சபை தெரிவித்துள்ளது.

நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்தை, கொலவத்தை, கொரக்கதெனிய, ரன்பொகுணகம, ரன்பொகுணகம வீடமைப்புத் திட்டம், படலிய, அத்தனகல்ல, பஸ்யால, மாபகலந்த, ஊராபொல, திக்கந்த , மிட்டிகம்மன , மாஓலுள்ள ,மக்களான ஹக்கல்ல ,எலவல ,எல்லாமுள்ள ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட கூட்டு நீர் விநியோக அமைப்பின் நிட்டம்புவவிலிருந்து மினுவனகொட வரையிலான குழாய் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )