
இன்று நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம்
மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இலேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிவுகூறியுள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

