அனர்த்த நிலைமைகளில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா ,                      பிரதமர் மோடி X பதிவு

அனர்த்த நிலைமைகளில் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா , பிரதமர் மோடி X பதிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் குறித்து அனுதாபம் வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ,இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் இது குறித்து பதிவிட்டுள்ளார்,

திவா சூறாவளியால் தமது அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது ஆழ்த்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் விரைவான மீட்சிக்காக பிரார்த்திக்கிறேன்.

நமது நெருங்கிய அண்டை நாடுகளுடன் ஒற்றுமையுடன், ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியா நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான ஆதரவை அவசரமாக அனுப்பியுள்ளது.

மேலும் பொருளுதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முன்னுரிமை கொள்கை மற்றும் மஹாசாகர் ஆகியவற்றின் வழியில் , தேவைப்படும் போது இலங்கையுடன் இந்தியா தொடர்ந்தும் உறுதியாக நிற்கிறது. – என நரேந்திர மோடி தனது x பதிவில் கூறியுள்ளார் .

தற்போதைய பேரனார்த்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை வழங்குவதாகவும்
விமானத்தை ஏற்றிச் செல்லும் இந்தியக் கப்பல் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )