எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது !

எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது !

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று(8) மேற்கொண்ட வீதிச்சோதனை நடவடிக்கையின் போது ஜஸ்போதைப்பொருளுடன் எரிபொருள் தாங்கி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துராஐவெல பகுதியில் இருந்து யாழிற்கு எரிபொருள் ஏற்றிவந்த எரிபொருள் தாங்கியினை யாழ் மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையாக சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து ஜஸ், கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்திய நிலையில் சாரதி ஜஸ் மற்றும் கஞ்சா பயன்படுத்திய நிலையில் வாகனத்தை செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )