
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து 26 சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில்இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் , யூடியூப் உள்ளிட்ட 26 வகையான சமூக வலைதளங்களுக்கு கடந்த 4 ஆம் திகதி நேபாள அரசாங்கம் தடை விதித்தது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்மண்டுவில் இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

