
கொலம்பியாவில் விமான விபத்து ; 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலா எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா அரசுக்கு சொந்தமான “சதேனா” (Satena) விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த விமானமே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 15 பேர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கொலம்பியா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES World News

