சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலை ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டை கடந்த சில நாட்களாகப் பலத்த தாக்கம் ஏற்படுத்தி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரத்தில், அனர்த்தங்களால் 209 பேர் காணாமல் போயுள்ளதாக நேற்று (6) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை தாக்கம் நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ளது. இதனால் 583,030 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 4,071 வீடுகள் முழுமையாகவும், 71,121 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )