ரந்தம்பே–மஹியங்கனை மின்கம்பி சீரமைப்பு நிறைவு

ரந்தம்பே–மஹியங்கனை மின்கம்பி சீரமைப்பு நிறைவு

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரையிலான 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மஹியங்கனை பகுதிகளுக்கும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக மின்பரிமாற்றக் கட்டமைப்புகள் மற்றும் மின்வடங்களில் ஏற்பட்ட சேதங்களால், பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )