
ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் வருகிற 18-ந்திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘ரெட்ட தல’ படத்தின் ‘டார்க் தீம்’ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சாம் சி.எஸ். எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.
CATEGORIES Cinema

