
குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
தலாத்துஓயா – குருதெனிய பகுதியில் ஏற்பட்ட குளவி தாக்குதலில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் நான்கு பேர் காயமடைந்து தலாத்துஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குருதெனிய பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

