63 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அவிஸ்ஸாவளையை சேர்ந்த ஒருவர் கைது

63 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் அவிஸ்ஸாவளையை சேர்ந்த ஒருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற இலங்கையர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்றுகாலை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட நபர் அவிசாவெல்ல ,அப்பலபிட்டியவில் வசிக்கும் 21 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 42,000 வெளிநாட்டுத் தயாரிப்பான பிளாட்டினம் சிகரெட்டுகள் அடங்கிய 210 பெட்டிகளை ஒரு சூட்கேஸ் மற்றும் 03 பெட்டிகளில் மறைத்து வைத்திருந்தார்.

விமான நிலைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட சிகரெட் கையிருப்பு சுமார் 63 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு, ஜனவரி 7 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )