மட்டக்களப்பிற்கு வருகை தந்த பெருந்தொகையான Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள்

மட்டக்களப்பிற்கு வருகை தந்த பெருந்தொகையான Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள்

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் வருகைதந்துள்ளன.

Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகள் இனம் குறிப்பாக வருடம் தோறும் மார்கழி, தை, மாதங்களில் இப்பிரதேசத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருவதாகவும் பின்னர் ஏப்ரல் மதத்தில் மீண்டும் குஞ்சுகளுடன் அவுஸ்ரேலியா நாட்டிற்குத் திருப்பிச் செல்வதாகவும், சூழலியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈரநிலப் பகுதிகளில் இந்த புலம்பெயர் பறவைகள் வந்துள்ளமை மாவட்டத்தின் இயற்கை அழகை மேலும் மெரூகூட்டுவதாக அமைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு வெளிநாட்டவர்கள் இப்பகுதிக்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை சிலர் இறைச்சிக்காக இப்பறவைகளைவேட்டையாடி வருவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )