
தாய்வானில் இன்று 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்கிழக்கு தைவானில் உள்ள கடலோர மாவட்டமான டாய்டுங்கில் இன்று (24) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இதனால் தலைநகர் தைபேயில் உள்ள கட்டடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் சேத விபரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை .
11.9 கிலோமீட்டர் (7.39 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2016 ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .
இதேவேளை 1999 இல் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

