உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு                                                              இன்று இலங்கையில்  2000ரூபாயால் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு இன்று இலங்கையில் 2000ரூபாயால் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு தங்கச் சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை ரூ. 2,000 அதிகரித்துள்ளது.

இதற்கமைய , 24 கரட் தங்கம் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று ரூ. 354,000 ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று 24 கரட் தங்கம் பவுன் ஒன்று ரூ. 352,000 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று , 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் தங்கம் பவுன் ஒன்று சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )