சிங்களத் திரையிசையின் குயில் லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் குயில் லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் ‘குயில்’ எனப் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி லதா வல்பொல நேற்று (27) தனது 91வது வயதில் காலமானார்.

1934ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946ஆம் ஆண்டு 12 வயதிலேயே அன்றைய ‘ரேடியோ சிலோன்’ வானொலியில் தனது முதல் பாடலைப் பாடி இசை உலகில் கால்பதித்தார்.

அதன் பின்னர் பல தசாப்தங்களாக நீடித்த அவரது இசைப் பயணத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் அடங்குகின்றன.

1953ஆம் ஆண்டு ‘எதா ரே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு தனது குரலால் பங்களித்து சிங்களத் திரையிசை உலகில் அழியாத தடம் பதித்துள்ளார்.

இசைத் துறைக்கு அவர் செய்த அளப்பரிய சேவைகள், ரசிகர்களாலும் இசை உலகினராலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )