
பொரளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது
பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின் போது அவரிடமிருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

