மாரடைப்பால் மைதானத்தில் மயங்கி விழுந்து டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் உயிரிழப்பு

மாரடைப்பால் மைதானத்தில் மயங்கி விழுந்து டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் உயிரிழப்பு

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2020 கிரிக்கெட் போட்டியில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் Mahbub Ali Zaki மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரின் டாக்கா கெப்பிடல்ஸின் உதவி பயிற்சியாளரும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் (பிசிபி) இணைக்கப்பட்ட சிறப்பு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளருமான Mahbub Ali Zaki (மஹ்பூப் அலி ஜாகி )நேற்று சனிக்கிழமை போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) போட்டியின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பிறகு மைதானத்திலேயே சரிந்து விழுந்துபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )