
கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தின் போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் . “அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தின் போது youtuber ஒருவரை நோக்கி வீசப்பட்டதாக கூறப்படும் தண்ணீர் போத்தல் தவறுதலாக அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பட்டதில் இந்த பதற்ற நிலை ஏற்பட்டது.
அவ்வாறு வீசப்பட்ட போத்தல் போலீஸ் அதிகாரி ஒருவரின் மூக்கின் மீது தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தின் போது அதிகளவிலான பொலிஸார் , பொலிஸ்விசேட அதிரடிப்படையினர் மற்றும் நீர் பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன

