சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணத்தை அறவிட்ட 80 பஸ் வண்டிகளுக்கு அபராதம்

சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணத்தை அறவிட்ட 80 பஸ் வண்டிகளுக்கு அபராதம்

சிங்களப் புத்தாண்டு காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணத்தை அறவிட்ட 80 பஸ் வண்டிகளுக்கு அபராதம் விதிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 680 பஸ் வண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 80 பஸ்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் சுமார் 150 பஸ்கள் சோதனையிடப்பட்டதுடன், அவற்றில் அதிக கட்டணம் அறவிட்ட 12 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பயணிகளிடம் அறவிடப்பட்ட மேலதிக பணம் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் பஸ் சோதனையிடல் பிரிவின் தலைவர் ரோஹண தெரிவித்தார்.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை 24 மணிநேரமும் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக, ஹய்லெவல் வீதியில் ஹங்வெல்ல, களுஅக்கல பகுதிகளில் இத்தகைய சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )