மிதிகம கங்கொட வீட்டில்  துப்பாக்கிச் சூடு – காருக்கு தீ வைப்பு

மிதிகம கங்கொட வீட்டில் துப்பாக்கிச் சூடு – காருக்கு தீ வைப்பு

மிதிகம கங்கொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (18) நள்ளிரவு சுமார் 11.45 அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்தெரியாத இருவர், வீட்டின் வாயில் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அவர்கள் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு தீ வைத்ததுடன், வீட்டை நோக்கி சுமார் 5 ரவுண்டுகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டினால் வீட்டின் பல இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், வீட்டில் இருந்த எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது 35 வயதுடைய தொழிலதிபர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் முதியவர் ஒருவரும் வீட்டில் இருந்துள்ளனர் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )