
KHxRK படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். 4
7 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார்.
நேற்று இந்த படத்தின் (KHxRK) புரோமோ வீடியோ வெளியானது. இந்த வீடியோவில், கமலும் ரஜினியும் இணைந்து இயக்குனர் நெல்சனிடம் யார் ஹீரோ என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அடுத்த வருடம் (2027ம் ஆண்டு) தொடங்க உள்ளன. இதற்கிடையில், நேற்று KHxRK படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில், இன்று KHxRK படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

