
டி20 உலகக் கோப்பை ; நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியின் முதல் போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.
பல்லகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறும்.
போட்டியின் டாஸ் வென்ற இலங்கை அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இதற்கிடையே, போட்டி நடைபெறும் பல்லெகெலே பகுதியில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் போட்டி நடைபெறும் விதம் மாறுமா என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

