மாத்தளையில் 64 வயது தந்தையை குத்தி கொலை செய்த 34 வயது மகன்

மாத்தளையில் 64 வயது தந்தையை குத்தி கொலை செய்த 34 வயது மகன்

மாத்தளை, அதிரஹபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஏப்ரல் 24) காலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தந்தை இந்த சம்பவத்தில் உயிரிழந்தார் .

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

தற்போது சந்தேகநபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )