பியாகமவில் ரயிலில் கார் மோதிய வியாபாத்தில்மூவர் காயம்

பியாகமவில் ரயிலில் கார் மோதிய வியாபாத்தில்மூவர் காயம்

பெலியத்தவிலிருந்து மருதானை செல்லும் விரைவு ரயில் மீது , கொஸ்கம பியகம பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் ரயில் பாதையில் நுழைந்த கார் ஒன்றில் மோதியது.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து பலப்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கொஸ்கொட போலீசார் தெரிவித்தனர்.

இந்த ரயில் கடவையில் வண்ண சமிக்ஞை அமைப்பு பொருத்தப்பட்டு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு மணி ஒலித்துக் கொண்டிருந்தபோது ரயில் பாதையில் நுழைந்த கார் ,ரயிலில் மோதி தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

காரில் இருந்த தந்தை, மகன் மற்றும் உறவினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து கொஸ்கொட போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )