மறைந்த பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவிப்பு

மறைந்த பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான அறிவிப்பு

மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அன்னாரது இறுதிக்கிரியை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுதந்திர சதுக்க வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பொரளை பொதுமயானத்தில் அன்னாரது இறுதிக்கிரியை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )