நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி ; 3 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி ; 3 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 இந்திய மீனவர்கள் இன்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, அவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான மீனவர்கள் தற்போது கரைக்கு அழைத்து வரப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவின் இராமநாதபுர மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )