
மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழப்பு
குருணாகல்-லுணுவில பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கூறியதாவது, அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியோரில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

