வெனப்புவவில் நீரில் குதித்த 17 வயது சிறுமியை தேடும் நடவடிக்கை ஆரம்பம் ; சிறுமியை காப்பாற்ற நீரில் குதித்த இளைஞன் பாதுகாப்பாக மீட்பு

வெனப்புவவில் நீரில் குதித்த 17 வயது சிறுமியை தேடும் நடவடிக்கை ஆரம்பம் ; சிறுமியை காப்பாற்ற நீரில் குதித்த இளைஞன் பாதுகாப்பாக மீட்பு


வெனப்புவ நைனமடம பாலத்திலிருந்து ஜின் ஓயாவிற்குள் நேற்று (28) மாலை 5.30 அளவில் குதித்ததாகக் கூறப்படும் சிறுமி ஒருவரை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக வெனப்புவ பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜா எல போபிட்டியவைச் சேர்ந்த உமயங்கனா சத்சரணி என்ற 17 வயது சிறுமியே இவ்வாறு நீரில் குதித்து காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுமி , தான் காதல் உறவு கொண்டிருந்த இளைஞனை தொலைபேசியில் சம்பவ இடத்திற்கு வருமாறு தெரிவித்ததாகவும், இளைஞன் மற்றொரு நண்பருடன் நைனமடம பாலத்திற்கு அருகில் வந்தபோது ,சிறுமி ஜின் ஓயாவில் குதித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியை காப்பாற்றுவதற்காக அந்த இளைஞனும் ஜின் ஓயாவில் குதித்தபோது , இளைஞனை பிரதேசவாசிகள் மீட்ட்டுள்ளனர்.

எனினும் இளம் பெண் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )