
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர்.
அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தற்போது அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

