ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

லங்கா சதோச நிறுவனத்தின் சரக்கு வண்டியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை ரூ.25,000 ரொக்க பிணையிலும் , தலா ரூ.5 இலட்சம் மதிப்புள்ள நான்கு தனிநபர் பிணைதாரர்களின் உத்தரவாதத்திலும் விடுவிக்க உத்தரவிட்டது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர், அவரது மூத்த மகன் ஜோஹன் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )