முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை இராணுவத்தால் அவருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வெலிவேரிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றக்குழு தலைவரான மாகந்துரே மதுஷ் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட போதே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 09ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )