
லதா வல்பொலவின் திடீர் மறைவு நாட்டின் இசைத்துறைக்குப் பேரிழப்பாகும்
திருமதி லதா வல்பொலவின் திடீர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி லதா வல்பொல இசைத்துறை தொடர்பாக எனக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, எமது திறமைகளை மேம்படுத்துவதிலும் மெருகேற்றுவதிலும் ஒரு தாயைப் போல நடந்த கொண்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயர்ந்த மனிதநேயப் பண்புகளைப் பெற்ற நமது நாட்டின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவராக திருமதி லதா வல்பொலவை எம்மால் அழைக்கலாம்.
ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் கம் உதாவ வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதொரு திட்டமாக மாற்றுவதற்கும் இவர் தனது பங்களிப்பை நல்கினார். இந்நாட்டின் இசைத்துறை வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைபெற்று விளங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மறைந்த இந்நாட்டின் புகழ்பூத்த பாடகி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

