
மினுவாங்கொடையில் தொல்பொருட்களுடன் இருவர் கைது
மினுவாங்கொடை – மாதமுல்ல பகுதியில் தொல்பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஆண் ஒருவரும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரும் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

