
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு – விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீண்டகாலமாக உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், அவருக்கு இனி அந்த உரிமை கிடைக்காது. என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

