
தங்கம் கடத்த முயன்ற விமான நிறுவன ஊழியர் கைது
தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற தனியார் விமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ரூ. 46 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை குறித்த நபர் கடத்த முயன்றுள்ளார்.
தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அவர் தங்கப் பொருட்களை ஒரு பயணப் பையில் மறைத்து வைத்து, விமான ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட வெளியேறும் வழியாக வெளியேற முயன்றது கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடமிருந்து மொத்தமாக 1 கிலோ 163 கிராம் எடையுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

