
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கியினால் நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அரச ஈட்டு முதலீட்டு வங்கி 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது.
இதற்கான காசோலையை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் தலைவர் மஹீல் கூரகம,நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி இந்திக துஷார அசுரமான்ன மற்றும் ஏ.டபிள்யூ. பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

