நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு ; 679 பேர் கைது

நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு ; 679 பேர் கைது

நாடு முழுவதும் பொலிஸார் முன்னெடுத்த விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது, நேற்று (10) 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் 30,322 நபர்கள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது பதிவான விபரங்கள் பின்வருமாறு:

  • குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது
  • நீதிமன்ற பிடிவிறாந்து (Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேர் கைது
  • திறந்த பிடிவிறாந்து (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்த 150 பேர் கைது
  • மதுபோதையில் வாகனம் செலுத்திய 507 சாரதிகள் கைது
  • அபாயகரமான முறையில் வாகனம் செலுத்திய 39 பேர் கைது
  • ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 5,244 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள், நாடளாவிய ரீதியில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )