மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா – ஹட்டன் A7 பிரதான வீதியின் வேண்டிகோனர் பகுதியில், இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன் மோதியதே விபத்துக்குக் காரணமாகும்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லொறி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )