உனவட்டுன கடலில் சடலம் மீட்பு

உனவட்டுன கடலில் சடலம் மீட்பு

உனவட்டுன பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று, கடற்படை மற்றும் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் காலி உயர் நீதிமன்றத்தில் பணிபுரிபவர் என்பதற்கான அடையாள அட்டை சடலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வந்துரம்ப பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை நாளை (11) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தற்போது காலி தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )