
டுபாயில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரும், அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவரும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ், இவர்கள் டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த மூவரும் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது சம்பந்தப்பட்ட பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

