
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 925 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 925 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேகநபர்கள் வசமிருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,
321 கிராம் ஹெரோயின்,
606 கிராம் ஐஸ் போதைப்பொருள்,
636 கிராம் கஞ்சா,
28,845 கஞ்சா செடிகள்,
510 கிராம் குஷ் ரக போதைப்பொருள்,
159 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள்,
240 போதை மாத்திரைகள்,
711 கிராம் 470 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும்
04 கிலோகிராம் 953 கிராம் மாவா போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தீவிரமாக தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

