
சிலாபம் – வெல்ல கடற்பகுதியில் மீனவர்கள் இருவர் மாயம்
சிலாபம் – வெல்ல பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்கள் சிலாபம் – வெல்ல பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 44 வயதுடைய மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த மீனவர்கள் பயணித்த படகு கடலில் தனியாக மிதப்பதை மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்கள் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பாக கடற்படை மற்றும் மீன்பிடித் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவர்களை கண்டறிய மேலதிக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

