
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 9 பேர் கைது
அநுராதபுரம் – ஹுரிகஸ்வெவ பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் நேற்று (19) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், ஏழு ஆண் சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்கள் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தோண்டும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 70 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும், கலென்பிந்துனுவெவ மற்றும் ஹுரிகஸ்வெவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (20) கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

