
தெஹிவளை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரின் புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொலிஸார் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த AI புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 09 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசைப் பிரிவு குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் இருப்பின், கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்பு:
நிலையப் பொறுப்பதிகாரி
கல்கிசைப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம்
071-8596408

