துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய தோட்டாவும் கைப்பற்றப்பட்ட நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வதுகெதர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளில், குறித்த ஆயுதத்தை மற்றொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தமை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )