ஹால்துமுல்லவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஹால்துமுல்லவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஹால்துமுல்லவில் உள்ள இலுக்பலெஸ்ஸ வனப்பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 42,000 கஞ்சா செடிகள் (மதிப்பு 2.5 கோடி ரூபாய்) மற்றும் 32 கிலோகிராம் கஞ்சா (மதிப்பு 1.3 இலட்சம் ரூபாய்) பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹால்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )