
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் இந்த , துப்பாக்கிச் சூட்டுக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை ,கலகொட சுனாமிவட்டே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த விருந்துபசாரத்தின் போது நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

